பேருந்துநிறுத்தத்தில் உறங்கி கொண்டிருந்த முதியவர் உயிரிழப்பு

X
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேடு பேருந்து நிறுத்தத்தில் குட்டத்து ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி வயது 77 என்பவர் உறங்கிக் கொண்டிருந்தார். இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு பேருந்து நிறுத்தத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்த செய்தியாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த வேடசந்தூர் காவல் நிலைய போலீசார் ஆம்புலன்ஸ் இருக்கு தகவல் தெரிவித்து இருந்த முதியோரின் சடலத்தை வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து இந்த முதியவர் யார் எங்கிருந்து வந்தார், எதற்காக இங்கு படித்திருந்தார் என வேடசந்தூர் காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர் விஜய் கண்ணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

