ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு செய்தார்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே இரண்டு மாதத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட உட்பட்ட பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட வழித்தடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக திருவாடானை பேருந்து நிலையம் சின்ன கீரமங்கலம் மேலவயல், ஊரணிகோட்டை, அரசூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ள நிலையில் அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது உடன் திருவாடனை காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் முருகன், தனி பிரிவு தலைமை காவலர் அருண்குமார் உள்ளிட்ட காவலர்கள் இருந்தனர்
Next Story





