மேலப்பாளையத்தில் மாணவர்களுக்கு பாராட்டு

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் காயிதே மில்லத் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முஹம்மது அனஸ், சஜா, ஷாமிலா ஆகியோர் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்று அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு நேற்று பள்ளியில் வைத்து பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா, தலைமை ஆசிரியை அமலா, டாக்டர் பிரேமச்சந்திரன், முன்னாள் விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

