நொய்யல் ஆற்றுப் பாலத்தில் இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள். மின்விளக்கு அமைக்க எதிர்பார்ப்பு.
Karur King 24x7 |7 Sep 2024 5:56 AM GMT
நொய்யல் ஆற்றுப் பாலத்தில் இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள். மின்விளக்கு அமைக்க எதிர்பார்ப்பு.
நொய்யல் ஆற்றுப் பாலத்தில் இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள். மின்விளக்கு அமைக்க எதிர்பார்ப்பு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகாவில் உள்ள கரூர்- ஈரோடு சாலையில், நொய்யல் ஆற்றின் குறுக்கே முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் காலத்தில் பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பாலம் வழியாக கரூரில் இருந்து பேருந்துகள், கனரக வாகனங்கள், இருசக்கர மோட்டார் வாகனங்கள் மூலம் நாள்தோறும் வாகன ஓட்டிகள் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த பாலம் அமைத்து பல வருடங்கள் ஆகியும் பாலத்தின் மேல் மின்விளக்கு இதுவரை அமைக்கப்படவில்லை. பல வருடங்களுக்கு முன்பு கட்டிய இந்த குறுகிய பாலத்தில் தற்போது வாகன பெருக்கம் அதிகமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நாள்தோறும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பாலம் குறுகிய அளவில் உள்ளதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பாலத்தின் மீது மின் விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story