கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை.
Bhavanisagar King 24x7 |7 Sep 2024 6:07 AM GMT
கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை.
கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை. புரோக்கர்கள், அலுவலர்களிடம் இருந்து கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்.. கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் கோபி, சத்தியமங்கலம், பவானி என மூன்று மோட்டார் வாகன ஆய்வு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோபியில் உள்ள அலுவலகத்தில் மட்டும் ஆண்டிற்கு சுமார் 6 ஆயிரம் புதிய வாகனங்கள் பதிவு செய்யவும், வாகன பதிவு புதுப்பித்தல், பெயர் மாறுதல் என பல்வேறு பணிகளுக்காக ஆண்டு தோறும் சுமார் 10 ஆயிரம் வாகனங்கள் இங்கு வருவது வழக்கம். இதனால் கோபி வடனார போக்குவரத்து அலுவலகம் பரபரப்பாகவே இயங்கி வரும். லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்படாத நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மொத்தமாக பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகள் ழாக பெருந்துறையில் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலரும், கோவையில் இருந்து மோட்டார்வாகன ஆய்வாளரும் கூடுதல் பணிக்காக நியமிக்கப்பட்டனர். அதனால் மாதத்தில் சுமார் 10 நாட்கள் மட்டுமே அலுவலக வேலை நடைபெறுவதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அலுவலக புரோக்கர்கள், புதிய வாகனம் பதிவு செய்தல், தகுதி சான்று பெறுதல் போன்ற பணிகளுக்குகூடுதலாக பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்ததை தொடர்ந்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் லஞ்ச போலீசார் கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து கதவுகளை பூட்டிக்கொண்டு சோதனையை தோடங்கினர். அப்போது பல்வேறு பணிகளுக்காக அலுவலகம் வந்திருந்த 15 க்கும் மேற்பட்ட புரோக்கர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து புரோக்கர்கள், அலுவலர்களிடம் இருந்த 70 ஆயிரம் ரூபாய், அவர்களது செல்போனகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story