மாநகராட்சி அலுவலர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு. சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்.

மாநகராட்சி அலுவலர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு. சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்.
மாநகராட்சி அலுவலர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு. சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார். கரூர் மாநகராட்சி நகர் நல அலுவலராக பணியாற்றி வருபவர் தர்மபுரியை சேர்ந்த லட்சியவர்ணா வயது 42. சுமார் கடந்த மூன்று ஆண்டுகளாக கரூர் மாநகராட்சியில் நகர் நல அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இலட்சிய வர்ணா பெயரில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் போலியான பேஸ்புக் கணக்கை தொடங்கியுள்ளார். மேலும், அதன் மூலம் லட்சியவன்னாவின் பேஸ்புக் நண்பர்களை தொடர்பு கொண்டு facebook மூலம் பணம் கேட்டு வட மாநிலத்தைச் சேர்ந்தவர் குறுந்தகவல் அனுப்பி உள்ளனர். இதனால்,அதிர்ச்சி அடைந்த நகர் நல அலுவலர் இலட்சியவர்ணா, இது தொடர்பாக, கரூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகர் நல அலுவலர் பெயரில் போலி கணக்குத் துவங்கி, மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story