கீரம்பூர் சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேகம்.

Paramathi Velur King 24x7 |7 Sept 2024 4:19 PM ISTகீரம்பூர் சாய்பாபா கோயிலில் 10 ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர், செப்.8- நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப் பட்டியில் எழுந்தருளியுள்ள சாய் தபோவனத்தில் பத்தாம் ஆண்டு வருசாபிஷேகம் விழா இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை 4.15 மணிக்கு காலை ஆரத்தியும், 5 மணிக்கு மகா யாக ஹோமமும், காலை 6 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மங்கள ஸ்நானமும் நடைபெற்றது. 7 மணிக்கு சங்கல்ப பூஜையும், 8.15 மணிக்கு கூட்டு பிரார்த்தனை, மகா நைவேத்தியம் மற்றும் ஆரத்தியும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல், பரமத்திவேலுார், மோகனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாய் பாபாவை தரிசனம் செய்தனர். காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அன்னதானம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஆரத்தி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டிப்பட்டி சாய் தபோவனம் மற்றும் சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story
