பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேக விழா

ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டியப்பட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற அருள்மிகு பெரியக்காண்டியம்மன், ஏழு கன்னிமார்கள், விநாயகர், முருகன், மகா மந்திரமுனீசுவரர், அக்னி வடிவச்சிஅம்மன், மதுரைவீரன், மாயகருப்பண்ணசாமி, நாகலிங்கேஸ்சுவரர், நாகலிங்கேசுவரி ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியாக கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களுக்கு திருப்பணிகள் செய்து திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடத்துவதற்கு மலெசியா ரவி முத்துச்சாமி குடும்பத்தார்கள், குடிபாட்டுக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து அருள்மிகு பெரியக்காண்டியம்மன் உள்பட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் உயிர்ப்பு வேள்வி, பிம்பம் நிறுவுதல் உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது.
Next Story