ராமநாதபுரம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாரதிநகரில் இருக்கும் கற்பக விநாயகருக்கு கடந்த ஆகஸ்ட் 29 தேதி காப்பு கட்டப்பட்டு பத்து நாள் திருவிழாவாக நடைபெற்றது. திருவிழா தொடங்கியதில் இருந்து ஒவ்வோர் நாளும் மண்டகப்படி நடைபெற்று விநாயகருக்கு சிறப்பு அபிசேக ஆராதனை, தீப ஆராதனைகள் நடைபெற்றது. பத்தாம் நாள் திருவிழாக விநாயகர் சதுர்த்தி தினமான இன்று ஏராளமான பக்தர்கள் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து விநாயகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கன பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இரவு கலை நிகழ்ச்சியுடன் நிறைவுபெற்றது.
Next Story





