உடுமலை அருகே தென்னையில் வாடல் நோய் தாக்குதல்
Udumalaipettai King 24x7 |7 Sep 2024 3:34 PM GMT
அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியி ஆலமரத்தூர் வல்ல கொண்டபுரம் பகுதிகளில் தென்னை மரங்களில் புதுவிதமான நோய் தாக்குதல் வேகமாக பரவி வருகின்றது மரங்களின் தண்டு பகுதியில் ஒரு வித சாறு வருகிறது இந்த அறிகுறி தென்படும் முன்பே மரங்களின் ஓலைகள் சரிந்து காய்களும் கொட்டி விடுகின்றன சில மாதங்களில் தென்னை மரங்கள் முற்றிலும் காய்ப்பு திறன் இழந்து விடுகின்றது எனவே சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்
Next Story