நாமக்கல் நந்தவனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ தசாவதார அலங்காரத்தில் அருள் பாலித்த கணபதிகள்!
Namakkal King 24x7 |7 Sep 2024 4:02 PM GMT
தசாவதார அலங்காரத்தில் 10 விநாயகர்கள் அலங்கரித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது
நாமக்கல் டவுன் பஸ்நிலையம் அருகில் உள்ள நந்தவன தெருவில் ஆர்ய வைஸ்ய நந்தவனத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தசாவதார அலங்காரத்தில் 10 விநாயகர்கள் அலங்கரித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.முன்னதாக வாசவி மடத்தில் கணபதி ஹோமம் நடைப்பெற்று, அரச மர விநாயகருக்கு சந்தனக்காப்பும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி குழு சார்பில் 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேற்கண்ட தசாவதார விநாயகர் அலங்காரம் நாளை ஞாயிற்றுக்கிழமை வரை இருக்கும்.
Next Story