விருத்தாசலத்தில் வாலிபர் மீது தாக்குதல்
Virudhachalam King 24x7 |7 Sep 2024 4:29 PM GMT
வன்கொடுமை சட்டத்தில் 4 பேர் மீது வழக்கு
விருத்தாசலம் மேட்டு காலனியைச் சேர்ந்தவர் வீரராகவன் மகன் விஜயராகவன் (34). இவர் சொந்தமாக கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 ந் தேதி அன்று விருத்தாசலம் கடை வீதிக்கு பொருட்கள் வாங்க சென்றவர் தனது பைக்கை முல்லாத்தோட்டம் பகுதியில் நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்ப புறப்படும்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் பிரவீன், செந்தில் மகன் திலீப்குமார் என்கிற லட்டு, ஜல்லி செந்தில் மகன் ஆகாஷ், சரவணன் மகன் வசந்த் ஆகிய நான்கு பேர் விஜயராகவனின் பைக்கை எடுக்காதவாறு தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளனர். மேலும் எங்கள் ஏரியாவில் உனக்கு என்னடா வேலை என கூறி விஜயராகவனை அசிங்கமாக திட்டி கையில் வைத்திருந்த இரும்பு பைப், சென்ட்ரிங் ரீப்பர் ஆகியவைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து விஜயராகவன் விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் பிரவீன் உள்ளிட்ட 4 பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story