வெள்ளியணை கருமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
Karur King 24x7 |8 Sep 2024 6:56 AM GMT
வெள்ளியணை கருமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
வெள்ளியணை கருமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஊர் கொத்துக்காரர் தலைமையிலான விழா கமிட்டியினர், புனித நீரை சுமந்து சென்று கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் வெகு விமர்சையாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களாக இருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாதாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாதாரண நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் கரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 25,000 மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால் கும்பாபிஷேக தீர்த்தத்தை ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது தெளித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
Next Story