உடுமலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தி இன்னிசை இசை நிகழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஐஸ்வர்யா நகரில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. கற்பக விநாயகர் அறக்கட்டளை சார்பில் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா தலைவர் அரிமா லோகநாதன் தலைமையில் கொண்டாடப்பட்டது.விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. திருமறை திருப்புகழ் நாமவளி இசை நிகழ்விற்கு உடுமலை மக்கள் பேரவை தலைவர் யு.கே.பி முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். டாக்டர் சம்பத்குமார், நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கற்பக விநாயகர் அறக்கட்டளை சார்பில் செய்திருந்தனர். நிறைவாக பாலகிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.மேலும் திரளாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story




