ஆரணி பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு.
ஆரணி நகரில் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீ அரியாத்தம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி ஸ்ரீ விக்னேஸ்வரர் யாக பூஜைகள் நடத்தினர். அன்னதானமும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதே போல புதுகாமூர் பகுதியில் குழந்தை வரம் அருளும் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ வல்லப விநாயகருக்கும், படித்துறை விநாயகருக்கும் , கன்னிமூல கணபதி விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தி கொழுக்கட்டை, சுண்டல் , சர்க்கரைப் பொங்கல் , வெண்பொங்கல் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆரணி பழைய பஸ் நிலையம் அருகாமையில் சந்திரகுல விநாயகர் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன , கோட்டை மைதானம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பாக அமைந்துள்ள விநாயகர் கோயிலிலும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும் நகரில் ஆங்காங்கே அமைந்துள்ள விநாயகர் சிலைகளுக்கு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும் பெரிய கடை வீதியின் பொன், வெள்ளி வியாபாரிகள் சார்பாக 10 அடி உயரமுள்ள மகா கணபதி அமைத்து விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடினார். மேலும் தர்மராஜா கோயில் தெரு, கண்ணகி தெரு, விஏகே நகர், வடிவ ராஜா தெரு ,வி. டி. எஸ். தெரு, உழவர் சந்தை அருகாமையில், சைதாப்பேட்டை, பாரதியார் தெரு என 50க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் அமைத்து விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக கொண்டாடினர். மேலும் ஆரணி சுற்றியுள்ள சேவூர், எஸ்வி நகரம், குன்னத்தூர்,தச்சூர், விண்ணமங்கலம், நடுப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
Next Story




