ராசிபுரத்தில் திடீர் மழை: வாகனங்கள் எதிரே தெரியாததால் முகப்பு விளக்கு எரிய விட்டு சென்றது..
Rasipuram King 24x7 |8 Sep 2024 11:33 AM GMT
ராசிபுரத்தில் திடீர் மழை: வாகனங்கள் எதிரே தெரியாததால் முகப்பு விளக்கு எரிய விட்டு சென்றது..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றும் மாலை லேசான மழைப்பொழிவு இருந்தது. தொடர்ந்து இன்று காலை முதலே வெயில் அதிகரித்து காணப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் அதிகளவில் ஓடியது. சாக்கடை நீரும் நிரம்பி சாலையில் ஓடுவதால் வாகனத்தில் சென்றவர்கள் அவதி அடைந்தனர். மேலும் திடீர் கனமழையால் எதிரே வருகின்ற வாகனங்கள் தெரியாது அளவிற்கு மழை பொழிந்தது இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டு சென்றது. இதேபோல் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
Next Story