நெய்வேலியில் மாடியிலிருந்து விழுந்தவர் மரணம்
Pudukkottai King 24x7 |8 Sep 2024 1:25 PM GMT
விபத்து செய்திகள்
கரம்பக்குடி அடுத்த நெய்வேலியில் உள்ள பாலசுந்தரம் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை புரிந்து வந்தார். சொந்த வேலை காரணமாக நெய்வேலிக்கு வந்த போது நெய்வேலியில் உள்ள ஜெயராமன் காம்ப்ளக்ஸ் முதல் மாடியிலிருந்து தற்செயலாக கீழே விழுந்து தலையில் அடிபட்டார். மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்து விட்டார்
Next Story