அருள்மிகு வலம்புரி விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்..
Rasipuram King 24x7 |8 Sep 2024 1:29 PM GMT
அருள்மிகு வலம்புரி விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் உள்ள அருள்மிகு வலம்புரி விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வலம்புரி விநாயகருக்கு பல்வேறு மலர்கள் மற்றும் வண்ண விளக்குகள் அமைத்து சிறப்பாக அலங்காரம் செய்து வலம்புரி விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் சிறப்பாக செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வலம்புரி விநாயகரை வணங்கி சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Next Story