உடுமலையில் நகர ஆதித்தமிழர் பேரவை சார்பில் செயற்குழு கூட்டம்
Udumalaipettai King 24x7 |8 Sep 2024 2:28 PM GMT
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று ஆதித்தமிழர் நகர பேரவை சார்பில் செயற்குழு கூட்டம் நகர செயலாளர் முருகேசன் தலைமையில் நடைப்பெற்றது மாநில மகளிர் அணி செயலாளர் கௌசல்யா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கருத்துரை வழங்கி பேசினார்.ஆதித் தமிழர் தொழிலாளர் பேரவை மாநில செயலாளர் ஈழவேந்தன் ,மாநில மாணவர் அணி துனை செயலாளர் சுகன்யா ,மாவட்ட செயலாளர் பொன்.ராஜேந்திரன், தொழிலாளர் பேரவை மாவட்ட செயலாளர் முருகேசன் ,மாவட்ட தலைவர் கர்ணன் ,உடுமலை நகர தலைவர் சி. மணி ஆகியோர் கலந்து கொண்டுசிறப்பித்தனர். கூட்டத்தில் அருந்ததியர் சமூகத்திற்கு கடந்த 2009-ல் கலைஞர் அரசால் வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீடு சட்டப்படி செல்லும் என்று அன்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சீராய்வு மனு அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.. மேலும் எதிர்வரும் 11-9-2024 அன்று திருமாவளவன் அவர்களை கண்டித்து ஆதித் தமிழர் பேரவை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பேரவை தலைமை முடிவு செய்துள்ளது.. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உடுமலை நகரம் சார்பாக திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. உடுமலை நகரத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இறுதியாக உடுமலை நகர தலைவர் மணி நன்றியுரையாற்றினார்
Next Story