ஆண்டிபட்டி அருகே ஆதரவற்ற விதவை,கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தொண்டு நிறுவனத்தின் மூலம் வீடு வழங்குதல்
Andippatti King 24x7 |8 Sep 2024 3:37 PM GMT
சிலி நாட்டின் செலாவிப் இன்டர்நேஷனல் (Selavip International, Chile) நிதி உதவியுடன் வீடுகள் வழங்கப்பட்டது
ஆண்டிபட்டி அருகே ஆதரவற்ற விதவை,கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தொண்டு நிறுவனத்தின் மூலம் வீடு வழங்குதல் ; தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீ ரெங்கபுரம், மணியக்காரன்பட்டி,போடிதாசன் பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள ஆதரவற்ற விதவை பெண்கள்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களுக்கு சிலி நாட்டின் செலாவிப் இன்டர்நேஷனல் (Selavip International, Chile) நிதி உதவியுடன் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை (Deet) சார்பில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. புதியதாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் பிரேமலதா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அறங்காவலர்கள் சிவசக்தி,அந்தோணிசாமி,கள பொறியாளர் ராகுல், களப்பணியாளர் ரவி,தன்னார்வலர்கள் குழந்தை ராஜ்,சேகர், ஜீவநாதன், கு.பாலமுருகன், ப. பாலமுருகன் மற்றும் நிறுவன திட்ட அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story