பெரியகாப்பான்குளம் கரந்தை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
Virudhachalam King 24x7 |8 Sep 2024 4:39 PM GMT
திரளான பக்தர்கள் தரிசனம்
விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தில் கரந்தை அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 6 ந் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை, சங்கல்பம், விநாயகர் பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜை, தன பூஜையுடன் தொடங்கி மாலை 7 மணிக்கு மேல் முதல் கால பூஜை ஹோமமும், மகாதீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து 7 ந் தேதி விசேஷ சாந்தி, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகளும் நடைபெற்றது. இன்று 8 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு புறப்பட்டு 7.30 மணிக்கு விநாயகர், மகமாயி அம்மன் கும்பாபிஷேகமும் 7.45 மணிக்கு ஸ்ரீ பிடாரியம்மன் கும்பாபிஷேகமும், காலை 8 மணிக்கு கரந்தை அய்யனார் விமான கோபுரங்கள் கும்பாபிஷேகமும், காலை 8.15 மணிக்கு மூலவர் ஸ்ரீ கரந்தை அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் மகாதீபாரணைகளும் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கோவிந்தசாமி, அறங்காவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Next Story