விருத்தகிரீஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி
Virudhachalam King 24x7 |8 Sep 2024 4:51 PM GMT
13 ஆண்டுகளாக விநாயகருக்கு நாட்டியாஞ்சலி விழா நடத்தும் மாஸ்டர் அகடாமி
விநாயகர் சதுர்த்தி நாட்டியாஞ்சலி விழா விருத்தகிரீஸ்வரர் கோயிலில் நடந்தது கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர் கோயிலில் விநாயகர் அருள்பாளித்து வருகிறார். உலகம் முழுவதும் சிவனுக்கு மட்டுமே நாட்டியாஞ்சலி நடைபெற்று வரும் நிலையில், காசிக்கு நிகரான வீசம் நிறைந்த இக்கோயிலில் கடந்த 13 வருடங்களாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாஸ்டர் அகாடமி சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் விநாயகருக்கு நாட்டியாஞ்சலி நடனமாடி வழிபாடு நடத்தினார்கள். முன்னதாக புதிதாக மேடை ஏறிய மாணவர்களுக்கு ஆடல்வல்லான் சன்னதியில் சலங்கை பூஜை செய்யப்பட்டது. பின் கலையரங்கத்தில் நாட்டியாஞ்சலி நடைபெற்றது. இதில் விநாயகர், சிவன், பார்வதி, முருகர் ஆகிய கடவுள்களுக்கு மாணவிகள் பரதநாட்டியம் ஆடியது காண்போரை வியப்பில் ஆற்றியது. சமயபுரம் அம்மன் வேடம் அணிந்து மாணவிகள் ஆடியது அனைவரையும் பக்தி பரவசப்படுத்தியது. மேலும் கோயில் செயல் அலுவலர் மாலா வழிகாட்டுதலின் படி கலந்துகொண்டு பரதநாட்டியம் ஆடிய மாணவர்களுக்கும் மாஸ்டர் அகாடமியின் குரு பாபு தலைமையிலான குழுவினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் சிவனுக்கு மட்டுமே நாட்டியஞ்சலி நடைபெறும் நிலையில் கடந்த 13 வருடங்களுக்கு மேலாக மாஸ்டர் அகாடமி மாணவிகள் விநாயகருக்கு நாட்டிய அஞ்சலி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.
Next Story