முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் தகவல்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 10.09.2024 முதல் 24.09.2024 வரை நடைபெற உள்ளது. இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். போட்டிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் நகல், பிறந்த தேதி சான்று, பள்ளி மற்றும் கல்லூரியில் பயில்வதற்கான சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், அரசு ஊழியர்கள் பணிபுரியும் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, பொதுப் பிரிவு இருப்பிட சான்று ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மேலும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கண்டிப்பாக விளையாட்டுச் சீருடை மற்றும் காலணியுடன் பங்கேற்க வேண்டும். தளகளம், நீச்சல், கபாடி, ஹாக்கி, சதுரங்கம், கால்பந்து, கையுந்துபந்து, கோ-கோ, பொதுப்பிரிவினருக்கான கேரம், மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள், அரசு ஊழியர்களுக்கான போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்திலும், மேஜைப்பந்து, இறகுப்பந்து, சிலம்பம், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான கேரம் ஆகிய போட்டிகள் உள்விளையாட்டரங்கத்திலும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்திலும், கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் ஆர்விஎஸ் கல்லுாரி, ஜிடிஎன் கல்லுாரி மைதானங்களிலும், கைப்பந்து சின்னாளப்பட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மைதானத்திலும் நடைபெறவுள்ளன. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை, மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்-624004 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 7401703504 வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story