ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., சான்றிதழ் வழங்கல்

ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., சான்றிதழ் வழங்கல்
வழங்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 60 ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கற்றல் கற்பித்தல், காலம் தவறாமல் பள்ளிக்கு வருவது, மாணவர்கள் மீது அக்கறை, முறையாக பதிவேடுகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணி செய்த ஆசிரியர்கள் 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தின விழாவையொட்டி தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நேற்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சி.இ.ஓ., முருகன் தலைமை தாங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசுகையில், 'மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மாதந்தோறும் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஆசிரியர்கள் தங்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். காலம் தவறாமல் பள்ளிக்குச் சென்று அரசின் அனைத்து நலத்திட்டங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு சென்றடையும் வகையில் ஆர்வமுடன் செயல்பட வேண்டும்' என்றார். விழாவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிமணி உட்பட ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் தண்டபாணி நன்றி கூறினார்.
Next Story