மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள் பெறலாம்

மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள் பெறலாம்
பெறலாம்
கள்ளக்குறுச்சி மாவட்டத்தில் மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள் பெறும் வசதி துவங்கப்பட்டுள்ளது.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து முதன்மை வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னணு பண பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு தேவையான நெல், உளுந்து, மணிலா விதைகள், நுண்ணுாட்ட கலவைகள், உயிர் உரங்கள், ஜிங்சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருட்கள், அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.அனைத்து முதன்மை வேளாண் விரிவாக்க மையங்களிலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை ஏ.டி.எம்., டெபிட், கிரெடிட் கார்டு, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் கொண்ட பணமில்லா மின்னணு பரிவர்த்தனை மூலம் அரசு கணக்கில் செலுத்தி பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து முதன்மை வேளாண் விரிவாக்க மையங்களுக்கும் பணம் இல்லா மின்னணு பரிவர்த்தனை செய்யும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story