திருப்பூர் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் 

திருப்பூர் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் 
திருப்பூர் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் 
திருப்பூர் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம்  திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசுவாமி மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.  கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி  விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், எம்பி தேர்தலில் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளோம்,தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி நிலைக்க,வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கும் பணியை வீடு வீடாகச் சென்று பார்வையிட வேண்டும். விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும், குறிப்பாக சென்னையில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் முடிந்து சந்தித்தபோது கையில் மையில்லை. என்று என்னவென்று கேட்ட போது தனது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் வாக்காளர்களிடையே விடுபட்டதால் ஓட்டு போட இயலவில்லை, என்று கூறினார். நமது கட்சி நிர்வாகிகள் ஐஏஎஸ் குடியிருப்புகுள் சென்று வாக்குகளை சரி பார்க்கவில்லை எந்த பகுதியாக இருந்தாலும் அனுமதி பெற்று சென்று இந்த பணியை தொடர வேண்டும் அப்பொழுதுதான் நம் இலக்கினையும் தேர்தலலில் அடைய முடியும் . மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர தளபதி உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொருவருடைய கோரிக்கைகளையும் கேட்டு முறையான விண்ணப்பங்களை நிர்வாகிகள் பெற்று அதிகாரியிடம் கூறி அந்த தேவைகளை பூர்த்தி செய்யும் பணியில் உங்களுடன் சேர்ந்து நானும் ஈடுபடுவேன் என்று கூறினார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக உறுப்பினர்கள் தீவிரமாக செயல்பட்டு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி  நிர்வாகிகளும் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இறுதியாக திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர்கள் கே. ஆர். முத்துக்குமார்,டி. சக்திவேல், பிரபாவதி பெரியசாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் கே.எம். முபாரக் அலி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம்,தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், நகர்மன்றத் துணைச் செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் இந்நாள் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story