மாதாந்திர பராமரிப்பு பணிகள். மின்வினியோகம் நிறுத்தம். செயற்பொறியாளர் கனிகைமார்தாள் அறிவிப்பு.
Karur King 24x7 |9 Sep 2024 3:14 AM GMT
மாதாந்திர பராமரிப்பு பணிகள். மின்வினியோகம் நிறுத்தம். செயற்பொறியாளர் கனிகைமார்தாள் அறிவிப்பு.
மாதாந்திர பராமரிப்பு பணிகள். மின்வினியோகம் நிறுத்தம். செயற்பொறியாளர் அறிவிப்பு. கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் மின் வினியோகம் சீராக விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு பகுதியாக மின் தொடர் அமைப்புகள் மற்றும் வின் வினியோகம் செய்யும் மின்வழிப்பாதைகளை கரூர் மாவட்ட மின்வாரியம் சீரமைத்து வருகிறது. இதன் அடிப்படையில் கரூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி, செல்லி வலசு, அரவக்குறிச்சி உள்ளிட்ட துணை மின் நிலைய பகுதிகளில், நாளை செப்டம்பர் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கரூர் மின் வாரிய செயற்பொறியாளர் கனிகைமார்தாள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பள்ளப்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அரவக்குறிச்சி, அண்ணா நகர், சௌந்தராபுரம், லிங்கம்ம நாயக்கன்பட்டி பகுதிகளிலும், கருங்கல்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ணப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், செல்லிவலசு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, இனுங்கனூர், வெடிக்காரன்பட்டி, குறிகாரன்வலசு, நவமரத்துப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளிலும், அரவக்குறிச்சி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கொத்தபாளையம், பெரியவலையப்பட்டி, ஆர்பி புதூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார். எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தங்களது பணிகளை முடித்துக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Next Story