மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

X
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உட்கோட்டம் மடத்துக்குளம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் நோக்கில் தாராபுரம் மதுவிலக்கு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது மடத்துக்குளம் செங்கழனிபுதூர் பேருந்து நிலையப் பகுதியில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பாசுதேவ் பால் என்பவர் சுமார் 3 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அதை கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story

