மது போதை ஆசாமியின் அட்ராசிட்டி
Dindigul King 24x7 |9 Sep 2024 3:47 AM GMT
வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெரு பகுதியில் மது போதை ஆசாமியின் அட்ராசிட்டி
வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெரு பகுதியில், மேற்கு மாரம்பாடியை சேர்ந்த சேசுராஜ் என்பவர் மதுபோதையில் உடலில் காயங்களுடன் கிடந்தார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அப்போது அந்த மது போதை ஆசாமி ஆம்புலன்ஸில் ஏற மறுத்துள்ளார். அப்போது அந்த வழியே போதையில் அந்த சசிகுமார் என்பவர் சேசுராஜை தாக்கி ஆம்புலன்ஸில் ஏற்ற முயன்றார். அப்போதும் அவர் ஏற மறுத்ததால் சேசுராஜை, சசிக்குமார் சரமாரியாக அடித்து துவைத்தார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் சேசுராஜை சசிகுமார் இடமிருந்து மீட்டனர். மது போதை ஆசாமிகளின் அட்ராசிட்டியை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர் அங்கிருந்து தலை தெறிக்க தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மற்றொரு ஆம்புலன்சை வரவழைத்து காயமடைந்த சேசுராஜை அதில் ஏற்ற முயன்றனர். ஆனால் அவர் அந்த ஆம்புலன்சிலும் ஏற மறுத்து அட்ராசிட்டியில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன் போதை ஆசாமியை குண்டுகட்டாக தூக்கி ஆம்புலன்சுக்குள் அடைத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு மது போதை ஆசாமிகள் அட்ராசிட்டி செய்த சம்பவம் அந்த பகுதியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
Next Story