கிளிஞ்சநத்தம்- நாடக மேடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை- எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
Karur King 24x7 |9 Sep 2024 6:17 AM GMT
கிளிஞ்சநத்தம்- நாடக மேடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை- எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
கிளிஞ்சநத்தம்- நாடக மேடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை- எம்எல்ஏ துவக்கி வைத்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட, மாயனூர் ஊராட்சியில் உள்ள கிளிஞ்சநத்தம் பகுதியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய நாடக மேடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பெருந்தலைவர் சுமத்தராதேவி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, ஒப்பந்ததாரர் துரைசாமி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.
Next Story