தேனி டி.எஸ்.பி பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க கையில் கட்டுடன் வந்த இந்து முன்னணியினர்
Periyakulam King 24x7 |9 Sep 2024 9:04 AM GMT
இந்து முன்னணி
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சிறுவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய தேனி டி.எஸ்.பி பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க கையில் கட்டுடன் வந்த இந்து முன்னணியினர் தேனி நகரில் இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை 6 மணி அளவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது பெரியகுளம் சாலையில் ஊர்வலம் சென்ற போது டிராக்டரில் சென்ற பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது தேனி டிஎஸ்பி பார்த்திபன் தடியடி நடத்தியதாக கூறி சாலை மறியல் ஈடுபட்டு பின்னர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து ஊர்வலம் நடந்து முடிந்தது இந்நிலையில் டிஎஸ்பி நடத்திய தாக்குதலில் நான்கு வயது சிறுவர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கையில் கட்டுடன் தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர் மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர் டிஎஸ்பி பார்த்திபன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் புகார் மனுவை அளித்தனர்
Next Story