உடுமலை நகராட்சி கூட்டத்தில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் காரசார விவாதம்
Udumalaipettai King 24x7 |9 Sep 2024 9:34 AM GMT
135 தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருப்பூர்மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர மன்ற தலைவர் மத்தீன் தலைமையில் 23 வது சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தூய்மை பணிகள் முறையாக செய்யப்படுவது இல்லை எனவும் , தெரு நாய்கள் அதிகளவு சுற்றி வருகின்றன இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளதால் எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் எஸ்.வி.புரம் செல்லும் பகுதியில் தனியார் மதுபான கூடம் அமைந்துள்ள பகுதியில் அருகில் பள்ளி கல்லூரி இருப்பதால் மதுபான கடையை அகற்ற தீர்மானம் போட வேண்டும் எனவும் ,27 வது வார்டுக்குட்பட்ட நெடுஞ்செழியன் காலனி பகுதியில் குடியிருப்பு பகுதியில் தூர்வார படாமல் விஷச் சந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் தூர்வார வேண்டும் எனவும் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகள் முறையாக செய்யப்பட வில்லை என திமுக நகர மன்ற உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் நகராட்சி 33 வது வார்டு உறுப்பினரும் முன்னாள் நகராட்சி தலைவர் வேலுச்சாமி பேசும்பொழுது ..நகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளுக்கு டெண்டர் விடும் போது நகர மன்ற உறுப்பினர்களுக்கு முறையாக அறிவிப்பு விடாமல் பணிகள் நடைபெறுவதாகவும், ஒரே நபருக்கு டெண்டர் விடப்படுவதாகவும் தெரிவித்தார் .மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள கடைகளின் வாடகை அதிகமாக உள்ளதால் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்தார் இதற்கிடையில் உடுமலை நகராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த மத்தீன் உள்ள நிலையில் திமுகாவை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது
Next Story