சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தந்தை கைது!
Thoothukudi King 24x7 |9 Sep 2024 9:37 AM GMT
தூத்துக்குடி அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தந்தையை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தந்தையை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் (39). தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவர், தனது 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து ராஜீவை கைது செய்தனர்.
Next Story