தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
Tirupathur King 24x7 |9 Sep 2024 9:41 AM GMT
திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில், மானாவாரி சிறுதானியத்தை பாதுகாத்திடவும், தூக்கத் திட்டங்களை நடைமுறைப்படுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் முல்லை தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரேசன், மாவட்ட குழு சாமிக்கண்ணு, நந்தி, நகர செயலாளர் முருகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். உடல் நலத்தை பாதுகாக்கும் மானாவாரி(சிறுதானியம்) சாகுபடிக்கு வேளாண் துறையில் தனித்துறை அமைத்திடு. மானாவாரி பயிர்களை அரசே கொள்முதல் செய்து பொது விநியோக கடைகளில் ஊட்டசத்து மிகுந்த சிறுதானியங்களை விற்பனை செய்திடு சிறுதானிய உற்பத்தியை பெருக்கிட ஏக்கருக்கு 10 ஆயிரம் ஊக்க மானியம் வழங்கிடுக சிறுதானியங்களை சேமிக்க பாதுகாப்பு கிடங்குகளை அமைத்திடு சிறுதானிய உற்பத்தி இடுபொருட்களையும், விதைகளையும் 75 சதவீதம் மானியத்தில் வழங்கிடுக உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மக்களின் உடல் நலத்தையும் பாதுகாக்கின்ற சிறுதானிய பயிர் செய்கின்ள விவசாயிகளை பாதுகாக்கவும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Next Story