மகாவிஷ்ணு விவகாரத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. கரூரில் ஜோதிமணி பேட்டி.
Karur King 24x7 |9 Sep 2024 10:02 AM GMT
மகாவிஷ்ணு விவகாரத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. கரூரில் ஜோதிமணி பேட்டி.
மகாவிஷ்ணு விவகாரத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. கரூரில் ஜோதிமணி பேட்டி. கரூர் மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் மற்றும் எம்.பி ஜோதிமணி ஆகியோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி, ஜனநாயக நாட்டில் இந்திய குடிமகனாக உள்ள யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை முறையாக பதிவு செய்து, நடத்தும் உரிமை உள்ளது. புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கட்சி புதிதாக துவங்கப்பட்டுள்ள நிலையில்,அவர்கள் பின்புலத்தில் யார் உள்ளார்? என்பது குறித்து தற்போது சொல்ல முடியாது. கட்சியின் கொள்கையை அறிவித்து மக்களை சந்திக்கும் போதுதான் அவர்கள் நிலைப்பாடு என்ன என்பது தெரியும். மகாவிஷ்ணு விவகாரத்தில், கல்வி என்பது அறிவியல் சார்ந்த பகுத்தறிவு சிந்தனையோடு இருக்க வேண்டும். கல்விக்கூடத்தில் பழமை வாத சித்தாந்தங்களை பாஜக மட்டுமே தொடர்ந்து புகுத்தி வருகிறது. மகாவிஷ்ணு விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக செயல்பட்டு உரிய நடவடிக்கையும் எடுத்துள்ளது என்றார்.
Next Story