கஞ்சா வழக்கில் கைதானவர் போலீஸ் நிலையத்திலிருந்து தப்பி ஓட்டம்
Nagercoil King 24x7 |9 Sep 2024 11:48 AM GMT
துரத்தி பிடித்த போலீஸ்
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள காப்பியறை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்து வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வின் (24) என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் 110 கிராம் கஞ்சா பொட்டலங்களும் இருந்தது. இதை இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாகவும் தெரிய வந்தது. தொடர்ந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து செய்தனர். நேற்று செல்வினை நீதிமன்றத்தில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளில் போலீசார் தீவிரமாக இருந்தனர். அப்போது செல்வின் திடீரென போலீஸ் நிலையத்திலிருந்து தப்பி ஓடினார். இதை பார்த்ததும் போலீசார் வாலிபரை துரத்தி, கடைசியில் கருங்கள் போலீஸ் நிலையத்தில் பின்புறம் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த போது அவரை பிடித்தனர். மீண்டும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி, பின்னர் இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story