ராசிபுரத்தில் திமுக நகர கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் எம்பி பங்கேற்று சிறப்புரை ..
Rasipuram King 24x7 |9 Sep 2024 12:25 PM GMT
ராசிபுரத்தில் திமுக நகர கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் எம்பி பங்கேற்று சிறப்புரை ..
நாமக்கல் கிழக்கு மாவட்டம், இராசிபுரம் நகர கழக பொது உறுப்பினர்கள் கூட்டம், அரிமா சங்க திருமண மண்டபத்தில் ராசிபுரம் திமுக நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர் ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என். ராஜேஷ் குமார் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மாநிலங்கவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ் குமார் கலந்து கொண்டு கழக ஆக்க பணிகள் குறித்தும் , மேலும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் எவ்வாறு பணிகள் மேற்கொள்ள வேண்டும், என ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட கழக பொருளாளர் ஏகே.பாலசந்தர், நகர்மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி, மாநில மருத்துவரணி துணை செயலாளர் ராஜேஸ்பாபு, நகர கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், வார்டு கழக பிரதிநிதிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு கழக நிர்வாகிகள், நகர கழக சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story