டிஜிட்டல் பயிர் ஆய்வு திட்டத்தை புறகணித்து நாமக்கல்லில் கருப்பு பேட்ஜ் அணிந்து வி.ஏ.ஓ.க்கள் ஆர்ப்பாட்டம்!

ஜனவரி 8–இல் நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடுகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். டிஜிட்டல் அளவை பணியை புறக்கணிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிருவாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் மற்றும் கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகம் முன் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்ட தலைவர்கள் எஸ்.முருகேசன்,ரா.ராஜமாணிக்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாவட்ட செயலாளர் ஆர்.லட்சுமிநரசிம்மன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், மற்ற துறை பணிகளை கிராம நிருவாக அலுவலர்கள் மீது திணிக்கக் கூடாது. கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஜனவரி.8–இல் நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடுகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.டிஜிட்டல் அளவை பணியை புறக்கணிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வருகிற செப்டம்பர் 17–இல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பும்,செப்டம்பர் 30–இல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்த கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் மாவட்ட அமைப்பு செயலாளர் பிரபா,வட்ட செயலாளர்கள் பூபதி,நவீன்ராஜ், தமிழரசி, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story