நாமக்கல் உட்கோட்ட காவல்துறை ஏ.எஸ்.பியாக ஆகாஷ் ஜோஷி பொறுப்பேற்பு!
Namakkal King 24x7 |9 Sep 2024 2:53 PM GMT
தற்போது முதல் பணியிடமாக நாமக்கல் உட்கோட்ட ஏ.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் டிஎஸ்பியாக பணியாற்றி வரும், ஆனந்தராஜ் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதில் நாமக்கல் உட்கோட்ட காவல்துறை ஏ.எஸ்.பியாக ஆகாஷ் ஜோஷி (25) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாமக்கல் டிஎஸ்பி அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு போலீஸ், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். ஆகாஷ்ஜோஷி ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த ஒரு ஆண்டாக பயிற்சியில் இருந்து வந்தார். தற்போது முதல் பணியிடமாக நாமக்கல் உட்கோட்ட ஏ.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
Next Story