பூசிமலைக்குப்பம் ஸ்ரீ செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.
Arani King 24x7 |9 Sep 2024 6:04 PM GMT
ஆரணி செப் 9. ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்.நடைபெற்றது.
ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் மலைக்குன்று மீது அமைந்துள்ள கிராம தேவதையான ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் பராமரிப்பு பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழா முன்னிட்டு விநாயகர் பூஜையுடன் யாகசாலை பிரவேசம், அஷ்டபந்தம் சாற்றுதல், பூர்ணாஹுதி, தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்று கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் கோவிலில் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் மௌனகுரு சச்சிதானந்த சுவாமிகள், சிவகாளி ஸ்ரீ மோகனந்த சுவாமிகள், ஜோதிடர் இரா.குமரேசன் ஆகியோர் பங்கேற்று கும்பாபிஷேக விழாவை நடத்தினர். மேலும் நிகழ்ச்சியில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், திமுக தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, ஒன்றிய செயலாளர்கள் எம்.சுந்தர், துரை மாமது, எஸ்.மோகன், பாலமுருகன், நகரமன்ற துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பிஆர்ஜி.சேகர், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.பரிமளாகருணாகரன், தொழிலதிபர் பாரத் கேஸ் பி.என்.பழனி, ஊராட்சித்தலைவர் தங்கராஜ், மற்றும் விழா குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story