கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆரணி, செப் 9. ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை மாலை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்
ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை மாலை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆன்லைனில் நிலங்களுக்கு அடங்கல் கொண்டு வரும் பணியை மேற்கொள்வதற்கு மேலதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதற்குண்டான உபகரணங்களை கொடுக்கவும், இதற்கான பயிற்சியை அளிக்க வேண்டும் என்றும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆரணி வட்டத்தலைவர் கோபால் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் கண்டன உரையாற்றினார். மேலும் இதில் போராட்டக்குழுத்தலைவர் விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story