விவசாய இடுபொருட்கள் பெற்றிட யுபிஐ பரிவர்த்தனை

விவசாய இடுபொருட்கள் பெற்றிட யுபிஐ பரிவர்த்தனை
வேளாண் அதிகாரி தகவல்
விருத்தாசலம் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- விருத்தாசலம் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் துறையில் மின்னணு பண பரிவர்த்தனை ஏடிஎம் கார்டு, போன்பே, ஜி பே, பேடிஎம் மூலம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருந்து விநியோகம் செய்யப்படும் விதை, உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், நுண்ணூட்டக்கலவை உரங்கள், வேளாண் கருவிகள், தார்பாய் ஆகிய அனைத்து இடுபொருட்களையும் பெற்றிட விவசாயிகள் தங்களது ஏடிஎம் கார்டு, யுபிஐ அடையாள எண் மூலமாக பண பரிவர்த்தனை செய்து பயன் பெறலாம். மேலும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனையை 100 சதவீதம் செய்திட வேண்டும் என அரசு உத்தரவிடப்பட்டுள்ளதால் விருத்தாசலம் வேளாண் விரிவாக்க மையத்தில் இடுபொருட்கள் பெறவரும் அனைவரும் இன்று முதல் ஏடிஎம் கார்டு, கூகுள்பே, போன்பே, பேடிஎம் மூலம் மட்டுமே இடுபொருட்கள் பெற முடியும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே விருத்தாசலம் வட்டார விவசாயிகள் பணமில்லா பரிவர்த்தனை சேவையை முழுமையாக பயன்படுத்தி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story