கார் கவிழ்ந்து விபத்து லேப் டெக்னீசியன் காயம்

X
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா கோதை மங்கலத்தைச் சேர்ந்தவர் விக்டர் செல்லதுரை மகன் சாம் ரெனால்ட் (வயது 28). இவர் பழனியில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையத்தில் லேப் டெக்னீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் பழனியில் இருந்து பல ஊர்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று ரத்த மாதிரிகளை பெற்று பரிசோதனை செய்து வருகிறார். இந்த நிலையில் வெள்ளகோவிலுக்கு காரில் நேற்று வந்து கொண்டிருந்தார். மூலனூர் வெள்ளகோவில் சாலை கரட்டுப்பாளையம் வளைவில் வந்தபோது திடீரென நிலை தடுமாறிய கார் குப்புறக்கவிந்தது. இந்த விபத்தில் காயமடைந்த சாம்ராஜ் அருகில் இருந்தவர்கள் மீட்டு வெள்ளகோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story

