குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்தவரை கைது செய்த போலீசார்
Tiruvallur King 24x7 |10 Sep 2024 3:26 PM GMT
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் ஆந்திராவில் இருந்து வெங்காய வியாபாரி போல் நடித்துக் கொண்டு தமிழக அரசு தடை செய்த குட்கா பாக்கெட்டுகள் 708 கிலோ கடத்தி வந்த ஆந்திராவை சேர்ந்தவரை கைது செய்த போலீசார்
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் ஆந்திராவில் இருந்து வெங்காய வியாபாரி போல் நடித்துக் கொண்டு தமிழக அரசு தடை செய்த குட்கா பாக்கெட்டுகள் 708 கிலோ கடத்தி வந்த ஆந்திராவை சேர்ந்தவரை கைது செய்த போலீசார் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா ஆற்காடு குப்பம் ஊராட்சிக்கு வெளியே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர் அப்போது அந்த பகுதிக்கு எதிர்வழியில் உள்ள ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகப் பதிவின் கொண்ட சிறிய சரக்கு வாகனம் வருவதை கண்டவுடன் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அந்த வாகனத்தில் வெங்காய மூட்டைகள் அடியில் தமிழக அரசு தடை செய்த குட்கா பாக்கெட்டுகள் 708 கிலோ இருந்துள்ளது இதனை 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய சிறிய சரக்கு வாகனத்தில் ஆந்திராவை சேர்ந்த பலமனேரி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வாங்கி கடத்தி வந்துள்ளார் ரூபாய் 50 ஆயிரத்திற்கு வெங்காயம் மூட்டைகளை மேலே அடிக்கு வெங்காய வியாபாரி போல் நடித்துக் கொண்டு இப்படி குட்காவை கடத்தி வந்த வெங்கடேசனை போலீசார் கைது செய்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story