புரட்சி பாரதம் கட்சியின் டிஜிட்டல் பேனர் சாலையில் சென்ற வாலிபர் தலையில் விழுந்து படுகாயம்

திருவள்ளூர் மாவட்டம் சின்னம்மா பேட்டை பஜார் பகுதியில் புரட்சி பாரதம் கட்சியின் டிஜிட்டல் பேனர் சாலையில் சென்ற வாலிபர் தலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்
திருவள்ளூர் மாவட்டம் சின்னம்மா பேட்டை பஜார் பகுதியில் புரட்சி பாரதம் கட்சியின் டிஜிட்டல் பேனர் சாலையில் சென்ற வாலிபர் தலையில் விழுந்து படுகாயம் அடைந்தார் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மா பேட்டை பஜார் பகுதியில் புரட்சி பாரதம் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் அந்த கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியார் நினைவு நாளுக்காக செப்டம்பர்- 2ஆம் தேதி டிஜிட்டல் பேனர் வைத்திருந்தனர் இந்த டிஜிட்டல் பேனர் அகற்றாமல் இந்த நாள் வரை அப்படியே இருந்தது இதனால் சின்னம்மா பேட்டை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் அவரது தாயாரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மேற்கண்ட சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை கடக்கும் பொழுது திடீரென்று டிஜிட்டல் பேனர் சந்தோஷ் தலையின் மீது விழுந்தது படுகாயம் அடைந்தார் மேலும் அதிர்ஷ்டவசமாக பின்னால் இருந்து அவரது தாயார் உயிர் தப்பினார், இந்த டிஜிட்டல் பேனர் விழுந்ததில் சந்தோஷ் மண்டை படுகாயம் உடன் மண்டை கிழிந்தது அருகில் இருந்த பொதுமக்கள் டிஜிட்டல் பேனரை அந்த பகுதியில் இருந்து அகற்றி சந்தோஷை மீட்டு அருகில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, காவல்துறையின் தொடர்ந்து கவனக்குறைவு காரணமாக இது போல் டிஜிட்டல் பேனர்கள் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதின் காரணமாக நிகழ்ச்சிகள் முடிந்த பிறகும் டிஜிட்டல் பேனர்கள் பல நாட்களாக அப்படியே இருப்பதின் காரணமாக சாலையில் சென்றவர்கள் தலையில் விழுந்து இப்படி படுகாயம் அடைந்து வருகின்றனர், என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர், சென்னை உயர்நீதிமன்றம் டிஜிட்டல் பேனருக்கு கட்டுப்பாடுகள் விதித்த பின்பும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாததின் காரணமாக டிஜிட்டல் பேனர் விழுந்து இப்படி படுகாயம் அடையும் பொதுமக்கள் நிரந்தர தீர்வு ஏற்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
Next Story