சங்ககிரி அருகே கீழே சாய்ந்து விழும் அபாய நிலையில் மின்கம்பங்கள் சரி செய்ய விவசாயிகள், பொதுமக்கள் விடுத்த கோரிக்கை....
Sangagiri King 24x7 |10 Sep 2024 3:49 PM GMT
சங்ககிரி: வட்ராம்பாளையம் பகுதியில் கீழே சாய்ந்து விழும் அபாய நிலையில் மின்கம்பங்கள் சரி செய்ய விவசாயிகள், பொதுமக்கள் விடுத்த கோரிக்கை...
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி வட்ராம்பாளையத்திலிருந்து கல்வடங்கம் செல்லும் சாலையில் கீழ்வட்ராம்பாளையத்தில் சாலையோரம் சாய்ந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக சரி செய்ய வேண்டுமென அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மின்வாரியத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி, வட்ராம்பாளையத்திலிருந்து கல்வடங்கம், கோனேரிப்பட்டி, காவேரிப்பட்டி, மேட்டங்காடு, தேவூர், அரசிராமணி, உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு செல்லும் சாலையில் கீழ் வட்ராம்பாளையம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காற்றுடன் கூடிய பெய்த கனமழையால் சாலையோரம் நடப்பட்டிருந்த மின் கம்பங்களை சாயந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இருந்த மின்கம்பங்களுக்கு மேலே அதிக உயரழுத்த மின்கம்பிகள் செல்கின்றது . இவ்வழியாக விவசாயிகள் விளைபொருள்களை சந்தைகளுக்கு வாகனங்களில் எடுத்து சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி பேருந்துகள் தினசரி சென்று வருகின்றது .எனவே மின் விபத்துகள் ஏற்படும் முன் கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டுமென மின்வாரியத்திற்கும், சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story