கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/-அபராதம் விதித்து திண்டுக்கல் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு முனியாண்டி என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த அவரது தம்பி சந்தோஷ் குமார் (22) என்பவரை அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று 10.09.2024-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி சந்தோஷ் குமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
Next Story