பழக்கடையில் தாக்குதல் நடத்திய இருவர் கைது

X
விருத்தாசலம் பெரிய வட வாடி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் விருத்தகிரிஸ்வரர் கோவில் இடத்தில் மினி லாரியில் பழ விற்பனை செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 30) என்பவர் இவரிடம் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று கடையில் சுரேஷ்குமார் வேலை செய்து கொண்டிருந்தபோது முல்லா தோட்டம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (32), முகமது யூனுஸ் (44), ஆகிய இருவரும் கடையில் இருந்த சுரேஷ்குமாரிடம் மாமுல் கேட்டு பிரச்சினை செய்து கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சுரேஷ்குமாரையும் தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். சுரேஷ்குமாரையும் கடையிலிருந்த பொருட்களையும் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் மற்றும் முகமது யூனுஸ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

