இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கிய அமைச்சர்
Dharapuram King 24x7 |11 Sep 2024 4:05 AM GMT
இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கிய அமைச்சர்
இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கிய அமைச்சர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் , பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சுவாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய அமைச்சர் சாமிநாதன் கூறுகையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர்கள் உள்ளதா என்பதை சரி பார்த்து இல்லாத பொது மக்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என தெரிவித்தார் அப்போதுதான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க முடியும் என கூறினர். நிகழ்ச்சியில் இறுதியாக இளைஞர் அணியை சேர்ந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், திமுக நகர அவைத்தலைவர் கதிரவன், மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி மற்றும் இளைஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story