குறுமைய விளையாட்டுப் போட்டியில் பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிமாணவர்கள் சாதனை புரிந்தனர்.
Dharapuram King 24x7 |11 Sep 2024 4:06 AM GMT
குறுமைய விளையாட்டுப் போட்டியில் பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிமாணவர்கள் சாதனை புரிந்தனர்.
குறுமைய விளையாட்டுப் போட்டியில் பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிமாணவர்கள் சாதனை புரிந்தனர். தாராபுரம் வட்டார அளவிலானகுறுமைய விளையாட்டுப் போட்டியில் பொன்னு மெட்ரிக் பள்ளிமாணவ,மாணவியர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்கள். வளைபந்து இரட்டையர் பிரிவில் இளஞ்செழியன்,ஹர்திப்கிரன் (ஒன்பதாம் வகுப்பு) ஆகியோர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்கள். இளையோர் பிரிவில் நடந்த கைப்பந்து போட்டியில் ஸ்ரீபூமிகா, அகல்யா, தன்சிகா, ஆதினி, தான்யா, பவதாரணி, சுதிக்ஷா, செல்வசிந்து, சாதனா, யோகிதா, நிதர்ஷனா, ஜனனிபிரியா, கீர்த்திகா, சஷ்மிதா ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்கள். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9வகுப்பு மாணவர் கலையரசு முதலிடம் பெற்றார். 600 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இளஞ்செழியன் 9 வகுப்பு மாணவன் முதலிடம் பெற்றார்.மேலும் 80 மீட்டர் தடை தாண்டி ஓடும் பந்தயத்தில் இளஞ்செழியன் முதலிடம் பெற்றார். நீளம் தாண்டுதல் போட்டியில் கலையரசு முதலிடம் பெற்றார். உயரம் தாண்டுதலில் வெற்றிவேல் முதலிடம் பிடித்தார். 4 க்கு 100 மீட்டர் தொடரோட்டம் போட்டியில்இளஞ்செழியன், கலையரசு,ஆசீர் ஜெகோனிய கிறிஸ்டன், வெற்றிவேல் முதலிடம் பிடித்தனர். 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூத்தோர் பிரிவில் மானதி முதலிடம் பிடித்தார். 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜெயபிரித்திகா முதலிடம் பிடித்தார். 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மானதி முதலிடம் பிடித்தார். 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மானதி முதலிடம் பிடித்தார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆசீர் ஜெகோனிய கிறிஸ்டன் இரண்டாம் இடம் பிடித்தார். நீளம் தாண்டுதலில் இளஞ்செழியன் இரண்டாம் இடம் பிடித்தார். 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூத்தோர் பிரிவில் ராகவி இரண்டாம் இடம் பிடித்தார். 4 க்கு400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் மூத்தோர் பிரிவில் மானதி, ராகவி,ஜெயபிரித்திகா, காவ்யாஸ்ரீ ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர். 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்.ஜெயபிரித்திகா மூன்றாம் இடம் பிடித்தார். வளைபந்து போட்டியில் ஒற்றையர் பிரிவில் இளஞ்செழியன் இரண்டாம் இடம் பிடித்தார். இறகுப்பந்து போட்டியில் இரட்டையர் பிரிவில் ரஞ்சன் கருப்பையா மற்றும் தரணிஸ் இரண்டாம் இடம் பிடித்தனர். வளைபந்து போட்டியில் இரட்டையர் பிரிவில்.மானதி,ஜெயபிரித்திகா இரண்டாம் இடம் பிடித்தனர். கேரம் போட்டியில் ஜெரோன் ஈவ்லின், அக்ஷிதா இரண்டாம் இடம் பிடித்தனர். தன்சிகா ஸ்ரீ சதுரங்கப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார் . 4 க்கு100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் .மானதி, ராகவி,ஜெயபிரித்திகா,காவ்யாஸ்ரீ ஆகியோர் மூன்றாம் இடம் பிடித்தனர். 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் இளஞ்செழியன் தனிநபர் தனித்திறன் சாம்பியன் பெற்றார். 17 வயது மாணவியர் பிரிவில்.மானதி தனித்திறன் சாம்பியன் பெற்றார். சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மனோன்மணி ஆறுச்சாமி , நிர்வாக அறங்காவலர் ராமசாமிமற்றும் சேர்மன் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார்கள்.. மேலும் பெண்கள் பிரிவு தனித்திறன் சாம்பியன் கோப்பையை நிர்வாகஸ்தர் வி.எஸ்.என். சுஜாதா பாஸ்கர் வழங்கினார். ஆண்கள் பிரிவு தனித்திறன் சாம்பியன் கோப்பையை நிர்வாகஸ்தர் பாலு வழங்கினார். தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிர்வாகஸ்தர் . ராம்குமார் மோகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சீனியர் முதல்வர், முதல்வர், பெற்றோர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story